தமிழரசுக் கட்சியின் காடையர்களால் வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல் – இரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, July 14th, 2020

வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரவணபவன் தலைமையிலான குழுவினர் அப்பகுதி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டதால் இளைஞர் இருவர் பலமாகன காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

வங்களாவடி பகுதியில் பிரசார நடவடிக்கையில் சரவணபவன் மற்றும் குணாளன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அக்குழுவினர் அப்பகுதியில் இருந்த சில இளைஞ்ர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர்.

அதன்போது அந்த இளைஞர்கள் கூட்டமைப்பின் நல்லாட்சி செயற்பாடுகள் தொடர்பில் வினவியுள்ளனர். அதத்துடன் கடந்த முறையும் இவ்வாறே எம்மை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொண்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இளைஞர்களின் குறித்த செயலால் கோபமடைந்த கூட்டமைபின் பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் சகோதரன் குணாளன் அவ் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதனால் பலமாக தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் வீழ்ந்துள்ளார் இதன்பின்னரும் குறித்த இளைஞனை குணாளன் சரமாரியாக தாக்கியதில் ஒரு இளைஞர் மயக்கமுற்றுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள தலையிட்டு அவ் இளைஞனை வேலணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவ் இளைஞனின் நிலைமை மோசமாக காணப்பட்டதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: