தமிழக மீனவர்களின் அத்துமீறல் வடக்கு கடலில் மீண்டும் அதிகரிப்பு!

Tuesday, June 27th, 2017

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தடைக்காலம் நிறைவுபெற்றதை அடுத்து அவர்களின் அத்துமீறல் வடக்கு கடற்பரப்பில் மீண்டும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குள் 48 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையை மீறும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து பின்னர் விடுவிப்பதும், இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவதும் வழமையாகியுள்ளது. தமிழக மீனவர்கள் பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த 61 நாள் தடைக்காலம் கடந்த 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது

இந்ந நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சூறையாடுவதாக வடபகுதி மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் கடந்த நான்கு நாட்களில் தொடர்ச்சியாக 48 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் இராமேஸ்வரத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை ஊடாக எதிர்ப்பை தெரிவிக்குமாறு தமிழக முதலர்வர் எடப்பாடி பழனிசாமி பாரதப் பிரதமரிடம் கோரிக்கை விடுதுள்ளார்.இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்போர் கட்டாயமாக கைது செய்யப்படுவார்கள் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

Related posts: