தமிழக அகதிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு  பிரதமர் நடவடிக்கை!

Thursday, May 5th, 2016
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள், இலங்கையில் மீள குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் இலங்கையில் மீள குடியமர்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். மேலும் இந்த தமிழர்கள் இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் இது தொடர்பிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அகதிகள் தொடர்பில், சென்னையில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஊடக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: