தமிழகத்தை புரட்டிப்போட்ட மிக்ஜாங் புயல் – மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாததால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் என எச்சரிக்கை!

Friday, December 8th, 2023

வரலாறு காணாத வகையில் மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாத காரணத்தால் இன்றும் படகு சேவைகள் அமுலில் உள்ளன.

ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர் சாக்கடை தேங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரோடு கழிவு நீரும் சேர்ந்ததன் காரணமாக பல பொருட்கள் மீள பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு அவற்றை அப்புரப்படுத்துவதிலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வீதியெங்கிலும் வெள்ளம் புரண்டோடியதால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியல் மக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டி குவித்துள்ளனர். இவற்றை வீதிகளில் இருக்கும் நாய்கள் , மாடுகள் என்பன சீர்குலைப்பதால் அசௌகரியமான நிலை உருவாகியுள்ளது.

11, 700 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் , இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்தாறு சுகாதார பணியாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நோய்தடுப்பு பணிகளில் ஈடுப்படுத்ப்பட்டுளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: