தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்பு!

Saturday, August 28th, 2021

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நலன் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

அத்துடன் இதற்காக 317 கோடி ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

வீடுகளை நிர்மாணித்தல் உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் இந்த நிதி மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குதல் மற்றும் மீள இலங்கை திரும்புபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் போன்ற விடயங்களை ஆராயும் நோக்கில் குழுவொன்றையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டசபையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1983 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் பேர் இந்தியா வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள், 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: