தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் வருகை!

Monday, November 14th, 2016

தமிழகத்தின் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 41 பேர் எதிர்வரும் வாரம் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 5225 இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ministry-of-resettlement

Related posts: