தமது பூர்வீக நிலத்தில் குடியமர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரி இரணைமாதா நகர் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Monday, April 18th, 2016

பூநகரி இரணைமாதா நகர் மக்கள் தம்மை தமது சொந்த இடனமான இரணைதீவு பகுதியில் மீள்குடியேற்றம் செய்யக்கோரி இன்று இரணைமாதா நகர் கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நிலைமைகளை விபரமாக கேட்டறிந்து கொண்ட செயலாளர் நாயகம், குறித்த பகுதி மக்களது அவல நிலைமைகளை பிரதமர் அவர்களுடன் பேசி விரைவில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பில் கலந்துகொண்ட குமிழமுனை பகுதி மக்கள் பிரதிநிதிகள் பிரதேச சபையின் கீழ்வரும் தமது குழிழமுனை பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுத்ததோடு தமது பகுதி பாடசாலையை க.பொ.த உயர்தரம் வரை மணவர்கள் கல்வியை தொடர்வதற்கு ஏற்பாடு செய்த தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: