தமது பிரச்சினைகளுக்கே தீர்வு காணமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு தரும்?

தமக்குள்ள பிரச்சினைகளுக்கே தீர்வு காணமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எப்படிப்பெற்றுத் தருவார்கள் என்று யாழ்ப்பாணம் அத்தியடியைச் சேர்ந்த துரைராஜா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியில் நேற்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெறும் வெளிவேஷதாரிகளேயொழிய அவர்களிடம் நல்ல தலைமைத்துவமோ ஒற்றுமையோ இல்லை. அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாத இடியப்பச் சிக்கலான பிரச்சினைகள்.
இதனால் தான் அவர்களுக்குள் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று அந்தக் கட்சி கூறுகளாகப் பிளவுபட்டு உடைந்து போய் இருக்கின்றது.
அவர்களிடம் நல்ல தலைமைத்துவம் இல்லை. நேர்மையோ உண்மைத் தன்மையோ இல்லை. இந்த நிலையில் அவர்களிடம் இருந்து நாம் எவ்விதமான தீர்வுகளையும் ஒரு போதும் எதிர்பார்க்கமுடியாது.
ஆனால் டக்ளஸ் தேவானந்தா எப்போதும் ஏழைகளின் தோழனாகவும் மக்களின் காவலனாகவும் திகழ்ந்து வருகின்றார்.
இந்த தேர்தல் பந்தயத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை மக்களாகிய நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கும் போது மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாம் ஒரு போதும நம்பிக்கைத் துரோகம் இழைக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
Related posts:
|
|