தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்து 3 ஆண்டுகள் மட்டுமன்றி மேலும் 5 ஆண்டுகள் உள்ளன – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, July 19th, 2021

தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கு மேலும் 5 ஆண்டுகள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று ஊடக நிறுவன உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுவார்கள் என செய்திகள் வெளியாகியிரந்தன.

இந்நிலையில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போதே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துதுள்ளார்.

அத்துடன் தனது கொள்கையை செயற்படுத்த எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக, 5 ஆண்டுகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதேவேளை, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ச சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவானமை குறிப்பிடத்தக்கது

Related posts: