தமக்கு நிரந்தர நியமனங்கள் பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் .மாநகர சபையின் பொதுச் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Thursday, May 12th, 2016

தமக்கு நிரந்தர நியமனங்கள் பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி   கிழமை (10-05- யாழ் மாநகர சபையின் பொதுச் சுகாதார ஊழியர்கள் யாழ் .மாநகர சபை  முன்றலில் கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் .

2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நியமனங்கள் இன்றி ஏழு  வருடங்களாக 165 பேர்கள் யாழ் .மாநகர சபையில் கடமையாற்றுவதாகவும், ஆகவே , எமக்குரிய நியமனங்கள் உரிய வகையில் பெற்றுத்தரப்பட வேண்டும்  எனப் போராட்டத்தில் பங்கேற்ற யாழ் .மாநகர சபையின்  பொதுச்சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

யாழ். மாநகர சபையில் பல்வேறு ஊழல்கள் தற்சமயம் இடம்பெறுவதாகவும், இது தொடர்பில் மத்திய பொதுச்சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக யாழ் .மாநகர சபை ஆணையாளர் மற்றும் யாழ். மாநகர அலுவலக அதிகாரி ஆகியோர்  இவ்வாறான நியமனத்துக்குப்  இடையூறாக இருப்பதாகவும் குற்றம் சாட்டிய  மாநகர சபை பொதுச்சுகாதார ஊழியர்கள்

தமக்குரிய  நியமனங்கள் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் மண்ணெண்ணை ஊற்றித் தற்கொலை செய்வோம் எனவும் மண்ணெண்ணை , தீப்பெட்டியைத்  தமக்கு முன்பாக வைத்திருந்தவாறு எச்சரிக்கை விடுத்தனர்.

63813b2b-7de0-4f6e-b317-79dff297c40f

3819f01e-7123-42c4-9390-7fc98abd93f5

Related posts: