தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைந்ததுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
தபால் மூல வாக்களிப்புக்கென ஒதுக்கப்பட்ட நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்பதாக கடந்த 13 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை அளிக்க முடியாமல் போனோருக்கு நேற்றும் (20) இன்றும் (21) மேலதிக தினங்களாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு!
யாழ் பல்கலையில் தடை: புதிய நடைமுறை அமுல்!
எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் - நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!
|
|