தபால் மூல வாக்களிப்புக்கு 5 இலட்சம் பேர் தகுதி!

Tuesday, January 2nd, 2018

இம்முறை உள்ளராட்சி மன்றத் தேர்தலுக்காக 5 இலட்சம் அரச பணியாளாகள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குப்பதிவுகள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.இதன்படி, அரசாங்க ஊழியர்கள் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிப்பார்கள்.பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஜனவரி மாதம் 22ஆம் திகதி தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: