தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்ப கால எல்லை நீடிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார்.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 28ஆம் திகதியும், ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் டிசெம்பர் 4ஆம் திகதியும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டிருந்தன. குறித்த இந்நிலையில், மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக கால எல்லையை டிசெம்பர் 22 ஆம் திகதி வரை நீடித்திருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரதமருக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம்!
யாழ்., கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!
கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
|
|