தபால் பெட்டி வீதி மக்களது பிரச்சினைகளையும் கவனத்தில் எடுங்கள் – வலி.கிழக்கு மக்கள் கோரிக்கை!

Sunday, December 16th, 2018

கோப்பாய் வடக்கு தபால் பெட்டி வீதி நீண்டகாலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதால் போக்குவரத்தை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், அலுவலர்கள் எனப் பலரும் இந்த வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த வீதியைச் சீரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் வலி.கிழக்குப் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் அது தொடர்பில் உரிய தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மழை காலத்தில் இந்த வீதியில் வெள்ளம் தேங்கி காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வீதிகளை விரைவில் சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: