தபால் நிலையங்கள் அனைத்துக்கும் இணைய வசதி : அமைச்சர் பந்துல குணவர்தன!

Tuesday, December 17th, 2019


நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களையும் இணைய வசதிகளை கொண்ட தபால் நிலையங்களாக மாற்றியமைக்கவுள்ளதாக தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ருகுண பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்,

நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் எதிர்காலத்தில் இணைய வசதிகள் வழங்கப்படவுள்ளது. இந்த வசதிகள் தபால் அலுவலகங்களுக்கு வழங்கப்படுவதன் மூலம், மக்களுக்கு சிறந்த தரத்திலான சேவைகளை வழங்க முடிவதுடன் விரைவான சேவைகளையும் வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

Related posts: