தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்!

தபால் திணைக்கள ஊழியர்கள் சங்கங்கள் இன்று(12) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா விடுதியை நடாத்த தீர்மானித்துள்ளமை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தபால் திணைக்கள ஊழியர் சங்க முக்கியஸ்தர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து உரிய தீர்வொன்று கிடைக்காதவிடத்து எதிர்வரும் 29ம் திகதி நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த சங்கம் அரசுக்கு எச்சரித்துள்ளது
Related posts:
பாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்...
தேசிய மாணவர் காப்புறுதி தினம் நாடெங்கும் அனுஷ்டிப்பு!
ஊழியர் கொல்லப்பட்ட விவகாரம் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு அழைப்பாணை!
|
|