தபால் திணைக்களதிற்கு ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு – தபால் சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!

தபால் திணைக்களம் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தபால் சேவைகள் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தபால் திணைக்களத்தின் சேவைகளின் நோக்கத்தை அங்கீகரித்தால் இலங்கை தபால் திணைக்களம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்குதாரராக இருக்கும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரந்த வளங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலம் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தபால் சேவைகள் மற்றும் ஊடகங்களின் தொழில் மேம்பாட்டு அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தபால் திணைக்களம் தொடர்பாக அவதானம் செலுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!
தரம் ஒன்று மாணவர் சேர்ப்பு; இன்றுடன் நிறைவடைகிறது கால எல்லை -கல்வி அமைச்சு!
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல்!
|
|