தபால் சேவை ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம்!

Monday, December 19th, 2016

14 கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தபால் சேவை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

48 மணி நேரம் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே.காரியவசம் கூறினார். 10 வருடங்களாக தபால் திணைக்களத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமையின் காரணமாக இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்.கே.காரியவசம் கூறினார்

529202627Post

Related posts: