தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!

Saturday, June 23rd, 2018

தபால் கட்டணங்களை தபால் விவகார மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு உயர்த்தியுள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சாதாரண தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்கள் ஐந்து ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. தபால் அட்டை ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டெலி மெயிலின் முதல் பத்து சொற்களுக்கான கட்டணங்கள் 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
குறித்த கட்டண அதிகரிப்பானது தபால் ஊழியர் சம்பளங்கள், போக்குவரத்து மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: