தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: நாளாந்தம் 17 கோடி ரூபா நட்டம் – தபால்மா அதிபர்!

Tuesday, June 19th, 2018

தபால் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டுமென தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன கேட்டுள்ளார்.

அத்துடன் ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும் தபால்மா அதிபர் கோரினார்.

மேலும் தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இவற்றுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வு தரப்படும் என்றும்  தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஞ்சல் வேலைநிறுத்தம் காரணமாக அரசாங்கம் நாளொன்றுக்கு 17 கோடி ரூபாவுக்கு மேலான இழப்பைச் சந்திக்கிறது என்றும் தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன அந்தப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: