தபால் ஊழியர் பற்றாக்குறை!

Thursday, June 2nd, 2016

நாடு முழுவதும் 1500 தபால் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்ளில் தபால் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல் நிலவுவதாக தபால் அதிபர் ரோஹண அபேவர்தன தெரிவித்தார்.

தபால் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை கடிதங்களை பகிர்ந்தளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிதாக தபால் ஊழியர்களை கடமையில் இணைத்து கொள்வது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ரோஹண அபேவர்தன தெரிவித்துள்ளார்

Related posts: