தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நிறைவு!

Tuesday, July 23rd, 2019

தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் நேற்று(22) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: