தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது – பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உறுதி!
Monday, March 15th, 2021எந்தவொரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்ற வகையில் நாம், வெறுப்பு அரசியலை விதைத்து சமாதானத்தை சீர்குலைப்பதன் மூலம் நாட்டின் சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் குடிமகன் என்ற வகையில தராதரம் பாராமல் அனைவரும் நாட்டின் நிலவும் சட்டத்தை மதித்து, பின்பற்ற வேண்டும். தனிப்பட்ட நபர் ஒருவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப சட்டங்களை மாற்ற முடியாது”.
“தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்களை திருத்துவதற்கான எந்தவொரு தேவை ஏற்படுமாயின், அத்தகைய சட்டங்கள் சட்ட வல்லுனர்களின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திருத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் நியாயமற்ற விஷயங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. சமூகங்களுக்கும் மதத்திற்கும் இடையேயான ஆரோக்கிய ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் விரைவாக செயல்பட தயாராக உள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
|
|