தனி நபரின் தவறே நாடு முழுவதும் மின் தடை ஏற்படக் காரணம் – உறுத்திப்படுத்தியது விசாரணை குழு!

Thursday, August 27th, 2020

அண்மையில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெரவலபிட்டி க்றீட் உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி செயற்பாடுகளுக்கும் தடங்கல் ஏற்பட்டது என மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே மின்னுற்பத்தி நிலையங்கள் இரண்டும் ஒரே சந்தர்ப்பத்தில் செயலிழந்தன எனவும் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமைக்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் நேற்றையதினம் (26) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முன்பதாக கடந்த 17 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

9 பேரைக் கொண்ட இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கடந்த திங்கட்கிழமை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: