தனி சிகரெட் விற்பனைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து!

Monday, March 20th, 2017

தனியான சிகரெட்டை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டதிட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் நாளை (20) கைச்சாத்திடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் காரணமாக நாட்டில் 47 சதவீதம் புகைத்தல் பாவனை குறைந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மல்வானை பிரதேசத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புகைத்தல் காரணமாக நோய் வாய்ப்புக்குட்பட்டவர்களுக்காக வருடாந்தம் 72 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக குறிப்பிட்டார்.

Related posts: