தனி ஒழுங்கை முறைமைக்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, April 27th, 2017
நாட்டில் அதிகரித்துவரும் வாகன நெரிசலை குறைப்பதற்கு பேருந்துகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை குறித்து அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை ராஜகிரிய மற்றும் ஆயுர்வேத சந்தி வரை குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையினை தொடர்ந்து கைவிடப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைச்சரவை அங்கீகாரம்..
2017ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி முதல் 23ம் திகதி வரையான காலப்பகுதியினுள் பாராளுமன்ற வீதியில் ராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்திவரை கொரியா சர்வதேச இணைவாக்க முகாமையகத்தின் தொழில்நுட்ப உதவியினை பெற்று முன்னோடி பேருந்து போக்குவரத்து கருத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஒத்திகை சிறந்த முறையில் திட்டமிடப்பட்டதுடன், பெறுபேறுகள் அறிவியல்சார் செயல்முறை கையாளுவதன் மூலம் அளவிடப்பட்டன. மேலும் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள இலகு ரக புகையிரத போக்குவரத்து மற்றும் புகையிரத இலத்திரனியல் மயப்படுத்தல் ஆகிய வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், துரித தீர்வொன்றாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்மொழியப்பட்ட பின்வரும் தீர்வுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• அலுவலக நேரங்களில் கீழ்க்காணும் வீதிகளில் பேருந்து போக்குவரத்துக்கு முன்னுரிமை ஊடுவழியினை அமைத்தல்
– காலி வீதியில், மொரடுவையிலிருந்து இரத்மலானை வரை மற்றும் வெல்லவத்தை பாலத்திலிருந்து கொல்லுபிட்டிய வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
– பாராளுமன்ற வீதியில், பாராளுமன்ற சந்தியிலிருந்து ராஜகிரிய, பொரளை, மருதானை மற்றும் புறக்கோட்டையினூடாக கொழும்பு கோட்டை வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
– கொழும்பு, சித்தம்பலம் ஏ. காடினல் மாவத்தையிலுள்ள விமானப்படை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
– துங்முல்ல சந்தியிலிருந்து நூதனசாலை சந்திவரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
– நகர மண்டபத்திலிருந்து துங்முல்ல சந்தி வரை கொழும்பிலிருந்து வெளியில் பயணிக்கும் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஊடுவழி
- பாரம்பரிய பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி இறக்குமதி செய்வதற்காக வரிச்சலுகை வழங்குவதற்கு பதிலாக, சலுகை கடன் முறையின் மூலம் டுழற குடழழச அடங்கிய காற்று சீரமைப்பினைக் கொண்ட போக்குவரத்து பேருந்து இறக்குமதியினை விருத்தி செய்தல்.
• பேருந்துகளில் இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறைமையினை அறிமுகம் செய்தல் - முச்சக்கர வண்டிகள், வாடகை வண்டிகளுக்கான தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தல்.
Related posts:
|
|