தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை – யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!

Monday, December 14th, 2020

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவலாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலகம் இதனடிப்படையில் உடுவில் பிரதேசத்தின் முடக்கம் தளர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் யாழ்.மாவட்டத்தில் தற்போது 1144 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்தாகவும் மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

யாழ்.மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமை குறித்து மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே 744 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சுமார் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது மொத்தமாக 1144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 26 தொற்றாளர்களும் மாவட்டத்தில் பரவலாக காணப்படுவதனால், ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்கி பயனில்லை என்பதனாலே உடுவில் பிரதேச முடக்கம் தளர்ப்பட்டுள்ளது.

ஆனால் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனோடு அருகிலுள்ள கடை தொகுதிகள் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: