தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

வியாபார நிலையங்களில் தனி சிகரட் விற்பனை செய்வதை தடைசெய்வதற்கான சட்டம் இயற்றுவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்தி இருப்பதை வரவேற்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
அது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை விரைவாக தாக்கல் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.
இலங்கையினுள் சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான 10 யோசனைகள் அடங்கிய பட்டியல் ஒன்று தமது சங்கத்தினால் இதற்கு 06 மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
சிகரட்டுக்களை ஒவ்வொன்றாக அல்லது குறைந்தளவு சிகரட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட பெட்டிகளை விற்பனை செய்வது தடைசெய்யப்பட வேண்டும் என்பது அந்த யோசனைப் பட்டியலில் முதலில் கூறப்பட்டிந்த முக்கியமான விடயமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
அதன்படி இப்போதாவது இதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயமாகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் கூறியுள்ளார்.
Related posts:
|
|