தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற பிரத்தியேக அதிகாரி!

Tuesday, August 31st, 2021

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதலொன்று வெளியிடப்படாத காரணத்தினால் அத்தியாவசியமற்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் நியூமோனியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அதன் செயலாளர் அனுருந்த ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: