தனியார் வைத்தியசாலைகளை பதிவு செய்ய அறிவுறுத்து!
Tuesday, May 2nd, 2017யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று யாழ். பிராந்திய சுகாதரப் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
முழுநேர பகுதி நேர தனியார் வைத்தியசாலைகள், தனியார் ஆய்வு கூடங்கள், பகுதி நேர, முழுநேர பற் சிகிச்சை நிலையங்கள், தனியார் சிகிச்சை நிலையங்கள், தனியார் நோயாளர் காவு வண்டிச் சேவை, தனியார் மருத்துவ நிலையங்கள், தனியார் முழுநேர பகுதி நேர மருத்துவ நிபுணத்துவ ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், சுகாதார சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மருத்துவ நிலையங்கள் சட்டம் 21.2016 இன் பிரகாரம் தனியார் வைத்திய சேவை ஒழுங்குபடுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Related posts:
தமிழ் மக்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!
மரணதண்டனையை 20 வருட சிறைத் தண்டனையாக குறைக்க நடவடிக்கை - சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் தெரி...
நடவடிக்கை எடுக்கத் தவறினால் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கப்படும் - மீனவ சங்கப் பிரதிநிதிகள் அறிவிப...
|
|