தனியார் வைத்தியசாலைகளில்  சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தல்!

Thursday, March 8th, 2018

ஒழுங்குறுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைகளில் முதல் கட்டமாக 53 சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தப்படவிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசவைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் தனியார் வைத்தியத்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் வைத்தியசாலைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தின் யோசனைகள் கிடைத்தவுடன் எதிர்வரும் இரண்டு வாரத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர்தெரிவித்துள்ளார்.

Related posts: