தனியார் வங்கிகளுக்கு நிதி உதவி

இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு நிதி உதவி செய்து அவற்றின் மேம்பாட்டை உயர்த்துவதில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளுக்கு கடன், கொள்திறன் கட்டட நிர்மாண திட்டங்களுக்காக விசேட நிதியினை வழங்குவதன் மூலம் கணிசமான வளர்ச்சியினை பெற கூடியதாக இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஏ. இங்ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு நிதி வசதி செய்ததன் மூலம் அந்த வங்கிகள் பெரும் நன்மையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வங்கிகளுக்கு நிதி உதவி செய்வதற்கு ஏற்ற வகையில் மேலும் சில தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கமும் பூரண ஆதரவினை வழங்கி வருவதாகவும் கிறிஸ்டீன் ஏ. இங்ஸ்ரோம் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|