தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதிப்பு!

Friday, September 25th, 2020

நடைபெறவுள்ள உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

இதன்படி உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று தரம் 5 மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு 362,824 பரீட்சார்த்திகள் 2648 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை தோற்றவுள்ளனர்.

அதேபோன்று தரம் 5 புலமைப்பரீட்சையில் 331,694 மாணவர்கள் 2936 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 11 ஆம் திகதி தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: