தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் – தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!

Thursday, February 6th, 2020

புற்றுநோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம் நேற்று (05) இடைநிறுத்தியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்தமை, குறித்த மருந்துக்கு பதிலாக மாற்று மருந்தை லேபல் செய்தமை, ஆணையகத்தில் பதிவு செய்யாமல் மருந்துகளை இறக்குமதி செய்தமை, லேபல் செய்யும் போது தரத்திற்கு இணங்காமல் தரமற்ற மருந்துகளை லேபல் செய்தமை மற்றும் மருந்து இறக்குமதி செய்வதற்குள்ள நடைமுறைகளை மீறியமை அதேபோல் மருந்துகளை பாவிப்போருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்தக நிறுவனம் கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர் ஒருவருடன் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பில் அப்போது தெரிவிக்கப்பட்டன.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் (Cefotaxime for injection USP 1g) என அடையாளப்படுத்தப்படும் 20,000 ஊசி குப்பிகளை தரமற்ற முறையில் லேபள் செய்து கொண்டிருக்கும் போது கடந்த மாதம் கைப்பற்றப்பட்டது.

தேசிய ஒளெடத ஒழுங்குபடுத்தும் ஆணையக சட்டத்திற்கு அமையவே இந்த மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகத்தில் அதனை பதிவுசெய்யாது பங்களாதேசின் Orian pharma Ltd என்ற நிறுவனத்திடம் இருந்தே பெறப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அதற்கமைய பாமேஸ் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து உறுதி பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு பதிவுசெய்யும் சான்றிதழ்கள் அனைத்தும் உரிய அதிகாரிகளுக்கு மீள கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: