தனியார் மருந்தகம் சீல் வைப்பு!

Tuesday, July 12th, 2016

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்கு கிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய நேற்று மாலை ஆறு மணியளவில் குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான்நீதிமன்ற பதிவாளர் மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான குழுவினர் குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது –

தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் தர்மபுரம் மயில்வாகனபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவருக்கு மூன்றுமாதங்களிற்கு முன்னர் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றதாக இனம்தெரியாதநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் தர்மபுரம் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் அவ் தனியார் மருந்தாக வைத்தியர் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு கருவை கலைத்ததாக குறித்த சிறுமி தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டதை அடுத்து குறித்த மருந்தக வைத்தியர் மற்றும் சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் ஒருவரும் தர்மபுரம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்திஉள்ளனர்

வழக்கை விசாரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ .ஏ .ஆனந்தராஜ் குறித்த வைத்தியருக்கு ஒருலட்சம் ரூபா தண்டப்பணம் , மற்றும் தலா ஒருலட்சம் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும் சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞனிற்கு பதின்நான்கு நாட்கள் விளக்க மறியலில் வைக்கவும் மருந்தகத்தை சீல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்தே குறித்த மருந்தகம் இன்று சீல் வைக்கப்பட்டதுசிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் சிறுமியின் காதலன் என்றும்உகுறிப்பிடப்பட்டுள்ளது.

rftyh

625.0.560.320.160.600.053.800.668.160

Related posts:

வளப் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாக...
மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர்...
அனைத்துலக சுழியக் கழிவு தினம் இன்று - யாழ் நகரில் தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் ...