தனியார் மருந்தகங்களை விட அரச மருத்துவமனைகளின் நிலை மோசமானது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

தனியார் மருந்தகங்களைவிட அரச மருத்துவமனைகளின் நிலமை மோசம். மருத்துவமனைகளில் பாரதூரமான விடயங்கள் நடக்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் தனியார் மருந்தகங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மருந்தகங்கள் மீதான பிரச்சினை தொடர்பில் நடந்த விவாதம் கட்சிப் பிரச்சினை, நீங்கள் இல்லையென்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதுதான் உண்மை.
அனுமதி பெறாத மருந்தகங்கள், மருந்தாளர்கள் இல்லாது இயங்கும் மருந்தகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் அறிவித்திருக்கின்றார். அமைச்சர் கூறியது நடைமுறைக்குச் சாத்தியமா?
அரச மருத்துவமனைகளிலேயே நோயாளர்களுக்கு மருந்துகள் கூட மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவமனைகள் தொடர்பில் இங்கு கவனம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|