தனியார் மருத்துவமனை கட்டணங்களில் வரையறை!

Saturday, September 24th, 2016

தனியார் மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் சிகிச்சைகளுக்கான கட்டண அறவீடுகள் வரையறுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தனியார் மருத்துவமனைகளினால் வழங்கப்படும் சேவைக்கு சாதாரணான அறவீடுகளை மேற்கொள்ள வழிவகுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரதுறை தொடர்பில் அமைச்சர் என்ற வகையில் தம்மால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார்.

ministry-of-health

Related posts: