தனியார் மயமாகுமா புகையிரத திணைக்களம் ?

Sunday, September 25th, 2016

புகையிரத திணைக்களமானது தனியார் மயமாக்கப்படவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

திணைக்களத்தை தனியார் மயப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபடுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், எதிர்வரும் தினங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் புகையிரத தொழிற்சங்கத்தின் செயலாளர் சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் புகையிரத திணைக்களத்தினை தனியார் மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், தொழிற்சங்கம் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையினால் அது தோல்வியடைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: