தனியார் பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு!

Wednesday, November 30th, 2016

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் ரயில்வே ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றின் வேலைநிறுத்தம் நாளை நள்ளிரவு 12 மணியில் இருந்து ஆரம்பமாகிறது.

அரசங்கத்தின் வரவுசெலவு திட்ட மும்மொளிவுகளுக்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதாக வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவு திட்ட மும்மொழிவுகள் மூலம் வாகன சாரதிகளுக்கும் வாகனங்களுக்கமான தண்டப்பணம் மற்றும் வரிகள் தொடர்பில் தனியார் போக்குவரத்து சம்மேளனம் மற்றும் ரயில்வே ஊழியர் சம்மேளனம் ஆகியவை தொடர்ச்சியாக முரண்பட்டு வந்த நிலையில் நாளை நள்ளிரவு முதல் தமது உச்சக்கட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாளை நள்ளிரவு முதல் வரையரையின்றிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சை நடைபெறவுள்ள  நிலையில் இந்த பணிபகிஸ்கரிப்பு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஆகவே கைவிடுமாறும் அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

post-2376

Related posts: