தனியார் பேருந்து சேவைப் பகிஸ்கரிப்பின்போது தாக்குதலைமேற்கொண்டவர்கள் மீது பொலிஸ் தீவிர விசாரணை!

Tuesday, December 6th, 2016

தனியார் பேருந்து பணிப்பகிஷகரிப்பு இடம்பெற்ற அரச சொத்துக்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி சட்டம் மற்றும் ஒழுங்கினை மீறிய நபர்களை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்படுவர் என பொலிசார் தெரிவித்தனர்.

அதே போன்று இச்சட்ட விரோத செயல்களின் பின்னர் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் தொழிற்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். இதுதொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்; 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, மருதானை, தங்கல்லை, ஹம்பாந்தோட்டை, பெலியத்தை, திருகோணமலை, ஏறாவூர், வவுனியா, கொத்மலை, கடுகண்ணாவ மற்றும் வத்தேகம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கினை சீர்குலைத்தமை ,அரச சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமை, தாக்குதல்கள் மேற்கொண்டமை ஆகிய குற்றஞ்சாட்டுகளுக்கு எதிராகசட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுடன் ஈடுபட்ட ஏனைய நபர்களும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் இராணுவவீரர்; ஒருவர் தாக்கப்பட்ட சம்பவவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதற்கு பொலிபொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டடுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான இராணுவவீரரான லான்ஸ் கோப்ரல் ஜீ.ஆர்.எஸ்.சீ. சுமனரத்ன நாவலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் அநுராதபுர வைத்தியசாலையின்; தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறான சம்பவங்களினால் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதுடன் 128 பஸ்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பஸ்கள் தொடர்பில் விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

827710614Police

Related posts: