தனியார் பேருந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில்!

Monday, October 31st, 2016

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் தனியார் பேருந்து சேவைகள் பல இன்று(31) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளன.

கடவத்தை – கொழும்பு, கிரில்லவல – கொழும்பு, கம்பஹா கொழும்பு மற்றும் நிட்டம்புவ – கொழும்பு ஆகிய தனியார் பேருந்துகளே இவ்வாறு பணிப்புறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூரப் பயண சேவை மற்றும் சிறிய தூரப் பயண சேவை பேருந்துகளின் சாரதிகளுக்கு இடையில் அண்மையில் மோதல் நிலை ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த இந்த மோதல் காரணமாக சிறிய தூரப் பயண சேவையின் சாரதிகள் சிலர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

bus-strike

Related posts: