தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Monday, August 13th, 2018

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பினை கடந்த புதன்கிழமை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில்,  ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கைவிட்டதாகவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: