தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

Wednesday, November 16th, 2016

வீதி ஒழுங்கு மீறல்களுக்கான அபராதத் தொகை வரவு செலவுத் திட்டத்தில் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த திங்கட்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து சங்கங்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

எனினும் இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் காவற்துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்பிரகாரம் இந்த பேச்சுவார்த்தையை அவர்களின் பங்குபற்றுதலுடன் திங்கட்கிழமை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

gemunu

Related posts: