தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் – சங்கத்தின் தலைவர்!

Tuesday, November 15th, 2016

திட்டமிட்டவாறு இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வரவுசெலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்தர்.

எவ்வாறாயினும் குறித்த தண்டப்பணம் அறவிடுவது தொடர்பில் எவ்வித மாறுபாடுகளும் இடம்பெறாது என  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

gemunu_wijeratne

Related posts: