தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு!

வடமாகாண ரீதியில் இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வடக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இணைந்த நேர அட்டவணை அமுலாக்கத்தில் காணப்படும் இழுபறி நிலையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என வடக்க்கின் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தனியார் பேருந்துகள் சேவையிலீடுபடாமையினால் யாழ்ப்பாணம் மத்திய நிலையப்பகுதியில் தனியார் பேருந்து நிலையபகுதி வெறிச்சொடிக் காணப்படுகின்றது.
இதனிடையே, சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. சாரதி ஒருவர் தாக்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களுக்கான பண வவுச்சர் விநியோகம் பூர்த்தி!
வயல்களை பாதுகாக்க போராடும் கிளிநொச்சி விவசாயிகள்!
மரண தண்டனை விவகாரம் - ஜனாதிபதியின் தீர்மானத்தை மேலும் ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
|
|