தனியார் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்!

ஏற்கனவே திட்டமிட்டவாறு நேற்று நள்ளிரவு முதல் பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்களினால் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஸ்டென்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வீதிப்போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்களினால் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டென்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
7 வகையான வீதிப்போக்குவரத்து விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச அபராதமாக 25000 ரூபா அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சில வகை அபராதங்கள் குறித்து திருத்தம் செய்ய இணங்கப்பட்டதாகவும் இதனால் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். எனினும் திட்டமிட்டவாறு போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டென்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளைää பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எச்.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|