தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Monday, June 27th, 2016
ஒன்றிணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
யாழ். நகரில் இருந்து ஏ 9 வீதியூடாக வருகை தந்த வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்க உறுப்பினர்களுக்கும், வடமாகாண ஆளுநர், மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பினால் வடமாகாணத்தில் இன்று (27) காலை முதல் பயணிகள் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.இதனால் பாடசாலை மாணவர்கள்.அரச ஊழியர்கள், பொதுமக்கள் வீதியில் பஸ்ஸிற்காக நீண்டநேரம் காந்திருக்க நேரிட்டது.
இந்த பணி பகிஷ்கரிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்கள், அரச அதிகரிகள் போக்குவரத்து செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.வவுனியாவிலும் தூர இடங்களை நோக்கி செல்வதற்காக மிக நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
பணிபகிஷ்கரிப்பு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் உள்ளூர், வெளியூர் தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று பிற்பகல் வரை முன்னெடுக்கப்படவில்லை.
எவ்வாறாயினும்,இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமைபோல் வடமாணத்தில் இன்று சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தன.

Related posts: