தனியார் பஸ்க பயணிகளுக்கு !

கொழும்பு, கம்பஹா மற்றும், களுத்துறை மாவட்டங்களில் வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் நடைபெறுமானால் இது குறித்து 011 – 5559595 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு டிக்கட் வழங்காமை, அவ்வாறு டிக்கட் வழங்கினாலும் சில நடத்துனர்கள் மிகுதி சில்லறைக் காசுகளை சரியாக வழங்குவதில்லை. இவை குறித்தும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்க முடியும். இவை தவிர தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் தனியார் பஸ்களில் ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு, அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!
ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் உதய கம்மன்பில ...
|
|