தனியார் பஸ்களில் மிகுதிப்பணம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

Friday, May 11th, 2018

தனியார் பஸ்களில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

தனியார் பஸ்களின் நடத்துனர்களிடம் பணத்தைக் கொடுக்கும் போது குறுகிய தொகை மிகுதிப் பணம் எனில் அதனை வழங்காது விடுகின்றனர். சில நேரங்களில் பயணிகள் மிகுதிப் பணத்தை தருமாறு வற்புறுத்தினால் மாத்திரமே வழங்குவதுடன் சில நடத்துனர்கள் பற்றுச்சீட்டின் பின்புறமாக மிகுதிப் பணத்தின் தொகையை எழுதி இறங்கும் போதே பெறுமாறு கூறுகின்றனர்.

எனினும் குறித்த இடத்தில் இறங்கும் பயணி தான் இறங்க வேண்டிய இடத்தைப் பார்ப்பதில் கவனத்தைச் செலுத்துவதனாலும் இறங்குமாறு அவசரப்படுத்துவதனாலும் மிகுதிப் பணத்தை பெற முடியாத நிலை ஏற்படுகின்றது.

எனவே தினமும் பஸ்ஸில் பயணத்தினை மேற்கொள்ளும் பயணிகள் நடத்துனர்களின் இவ்வாறான செயற்பாட்டால் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

Related posts: