தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Tuesday, May 15th, 2018

13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்களைப் போன்று அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்காக முன்வந்திருக்கும் நிறுவனங்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த பேச்சில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 26 தொழில் கற்கைநெறிகள், பாடசாலை கற்கைநெறிகளில் சேர்க்கப்படவுள்ளன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் சித்தி பெறத் தவறிய மாணவர்கள், இந்தத் தொழில் கற்கைநெறியின் கீழ் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இதன் முதற்கட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தற்போது கல்வி கற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: